தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், வேல்சாமி, குகன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் இச்சிறுமியைப் பாலியல் சீண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அங்கு மதுபோதையில் வந்த சரவணன், அவருடைய கூட்டாளிகளும் உடலுறவுக்கு உடன்படாவிட்டால், குடும்பத்துடன் தீயிட்டு கொளுத்திவிடுவதாகவும் சிறுமியை மிரட்டி சென்றுள்ளனர். வீட்டில் எவரிடமும் கூறாமல், மன வேதனையடைந்த சிறுமி, தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.