மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தூத்துக்குடியில் ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது. அப்போது ஊடகவியலாளர்களுக்கு நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக மிகப் பெரிய அளவிலான கப்பல்கள் கையாலும் வகையில் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுவரும் மிதவையானம், சரக்கு பெட்டக மேம்பாடு உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் செய்தி மற்றும் கள விளம்பர பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறையின் கீழ் செயல்படும் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் சார்பாக தூத்துக்குடியில் ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது. இந்த பயிலரங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தனர்.