தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி காவலர் கொலை வழக்கு : 3 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் - court ordered the three to be remanded in custody

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே காவலர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் தமிழரசு உத்தரவிட்டுள்ளார்.

police death
police death

By

Published : Aug 20, 2020, 4:04 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நேற்று (ஆக.20) நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், காவல் துறை அலுவலர்கள், உறவினர்களும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

காவலர் உயிரிழந்த வழக்கில் காவல் துறையிடமிருந்து தப்பியோட முயன்ற மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்று 8 மணியளவில், கைது செய்யப்பட்ட சாமிநாதன், பலவேசம், சுடலை கண்ணு ஆகிய மூவரையும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் தமிழரசு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மூன்று பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். பின்னர் மூவரும் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்: தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details