தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திரையரங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ - ஓடிடியில் திரைப்படங்கள்

தூத்துக்குடி: ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுப்பார் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

By

Published : Nov 28, 2020, 8:53 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று (நவம்பர் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் தமிழ் திரைத்துறைக்கு முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு சலுகைகள், நிவாரணங்களை வழங்கினார். 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகளும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தற்போது ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, அந்த கட்டடம் காலியாக உள்ளது. தற்போது, கட்டடத்தை அகற்ற உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அந்த ஆபத்தான கட்டடம் அகற்றப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details