நெல்லை:தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் இன்று (ஏப்.26) நெல்லை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் நேற்று (ஏப்.25) பிற்பகலில் இரண்டு மர்ம நபர்களால் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து பணியில் இருந்தபோது, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் பணியில் மிகவும் நேர்மையானவர், தைரியமானவர். அதே நேரத்தில் அரசு சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணியை நேர்த்தியாக செய்து வந்தவர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் மணல் கடத்தல் விவகாரங்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க:"நேர்மையான விஏஓ லூர்து பிரான்சிஸை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்" - கலெக்டர்