தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2019, 2:27 PM IST

ETV Bharat / state

‘பேனர் வைப்பதில் காட்டும் மும்முரத்தை நீட் விவகாரத்தில் காட்டியிருக்கலாம்’ - கனிமொழி

தூத்துக்குடி: பேனர் வைப்பதில் காட்டும் முனைப்பை நீட் தேர்வு விவகாரத்தில் காட்டியிருந்தால் குழப்பம் இருந்திருக்காது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்திக்கும்மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று எட்டயபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, கைலாசபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, சென்னமரெட்டிபட்டி, முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, வெம்பூர் ஆகிய கிராமங்களின் வாக்காளர்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார். அப்போது மக்களிடம் அவர் பேசுகையில், ‘இதற்கு முன் இருந்த மக்களவை உறுப்பினரைப் போல் இல்லாமல், தொடர்ந்து உங்களை வந்து சந்தித்து, உங்கள் பிரச்னைகளை உங்களோடு நின்று சரி செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்வேன்.

இதேபோல், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப் பாடுபடுவேன். மேலும் மக்களவைத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி’ என்றார்.

கனிமொழி எம்.பி செய்தியாளர் சந்திப்பு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அவர்கள் நினைப்பதையெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவினர் பேனர் வைப்பதில் காட்டும் முனைப்பை நீட் தேர்வை ரத்து செய்வதில் காட்டியிருந்தால், தமிழ்நாட்டில் இவ்வளவு குழப்பங்கள் நிகழ்ந்திருக்காது’ என்றார்.

இதையும் படிங்க:அடிக்கிற வெயிலுக்கு தாமரை எங்கும் மலராது- கனிமொழி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details