தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தட்டார்மடம் கொலை வழக்கு: கைதுசெய்யப்பட்டவர்களை நேரில் அழைத்துச் சென்று சிபிசிஐடி விசாரணை - thatarmadam murder cbcid

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை நேரில் அழைத்துச் சென்று சிபிசிஐடில் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

thatarmadam murder cbcid
தட்டார்மடம் கொலை வழக்கு

By

Published : Oct 5, 2020, 2:44 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த வியாபாரி செல்வன், இவர் நிலத்தகராறு காரணமாக கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக அதிமுக பிரமுகர் திருமணவேல், சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். திருமணவேலின் உறவினர்கள் முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரும் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் சிபிசிஐடி காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவில்பட்டி முதலாவது ஜே.எம். நீதிபதி பாரதிதாசன் அனுமதி அளித்து உத்தரவிட்டதையடுத்து அந்நான்கு பேரும் சிபிசிஐடி அலுவலகம் அழைத்துவரப்பட்டனர். சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையிலான காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்லும் சிபிசிஐடி காவல் துறையினர்

மேலும், வியாபாரி செல்வன் காரில் கடத்திச் செல்லப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், தட்டார் மடம் காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து காவல் நிலையங்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான ஆவணங்களையும் சிபிசிஐடி அலுவலர்கள் ஆய்வுசெய்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் நடந்த விதம் குறித்து விளக்க கைதானவர்களை தட்டார்மடத்துக்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பிறகு நாளை நான்கு பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க:வியாபாரி கடத்திக்கொலை: காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details