இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவர் கே. சிவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கிடையே தற்போது விளையாட்டுப் போட்டிகள் நடந்துவருகின்றன. அதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிச் செல்கிறேன்.
சந்திரயான்-2 செயற்கைக் கோளின் ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்துகொண்டிருக்கிறது. அதிலுள்ள கருவிகள் எல்லாம் சரியாக இயங்குகின்றன. அடுத்ததாக வருகிற நவம்பரில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளோம்.
'ககன்யான்' திட்ட வேலைகள் நல்லபடியாக நடந்துவருகின்றன. ககன்யான் திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவருகிறார்கள். தேர்வுசெய்யப்படும் வீரர்கள் பயிற்சிக்காக ரஷ்யாவிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.