தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு ஆளுநர் கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் அடிப்படையில், இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு பிறகு தான் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவையில், நடந்த சம்பவம் சில நொடிகளிலேயே அருகில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு அளித்த தகவலின்படி, சில மணி நேரங்களில் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதில், மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அங்கே இருக்கக் கூடிய ஐபி மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். மாநில உளவுப் பிரிவு அதிகாரிகளும் சம்பவம் நடந்திருக்க கூடிய அன்றைய தினமே இந்த வெடி விபத்தில் இறந்த ஜமேஷா முபின் இறந்தவருடைய அந்த நபருடைய அடையாளம் உடனடியாக காணப்பட்டு அதுக்கு 24 மணி நேரத்திற்குள்ளாக அவருடைய வீடும் சோதனை இடப்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில், இது சிலிண்டர் விபத்து அல்ல, எனவே அங்கு இருக்கக்கூடிய கிடைத்திருக்கக் கூடிய பொருட்களில் இது வெறும் சிலிண்டர் விபத்து அல்ல, பின்னால் பயங்கரவாத செயலில் இருக்கக்கூடும் என்பதை காவல்துறை வழியாக அடிப்படையில் உடனடியாக விசாரணையை முடித்து விட்டு அன்றைய தினமே கூட்டாளிகளையும் உடனடியாக அடையாளம் கண்டு அவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை வலயத்தில் கொண்டு வந்து இருக்கிறது.
24ஆம் தேதி காலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அத்தனை பேரும் மாநில காவல்துறை உதவியோடு செயல்பட்டனர். மாநில காவல்துறை தமிழக காவல்துறைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு, இத்தகைய பயங்கரவாதச் ஆயுதங்கள் வைத்து இருக்க கூடிய இத்தகைய சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் எப்போதுமே மத்திய அரசு உறவு அமைப்புகளோடு இணைந்து செயல்பட கூடிய நடைமுறையை நம்முடைய தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து கொண்டு வருகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யப்பட்டு கூடிய அந்த நேரத்தில் கூட நம்முடைய மாநில காவல்துறை அதிகாரிகள் நம்முடைய காவல்துறை எந்த அளவிற்கு மத்திய உளவுத்துறையிடன் சேர்ந்து தகவல்கள் சேகரித்து பங்களிப்பு மிக சிறப்பாக இருந்தது என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது.