தூத்துக்குடி:தூத்துக்குடியை அடுத்த அந்தோணியார்புரத்தில் வசித்து வருபவர் பிரகாஷ்பாய் (65). இவர் அந்த பகுதியில் பி.சி.எஸ் பாலி கேப்ஸ் என்னும் பெயரில் பிளாஸ்டிக் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இங்கு தூக்கி எறிப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மரத்தூள் ஆகியவற்றை அரைத்து குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஆக.7) காலை பிளாஸ்டிக் ஏற்றுமதி நிறுவனத்தின் சேமிப்பு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய தீயால் வானுயர கரும்புகை எழுந்தது. இதனைக் கண்ட நிறுவன ஊழியர்கள், சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தூத்துக்குடி பிளாஸ்டிக் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து! இதில் ஏற்றுமதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள ஏற்றுமதி பொருள்கள் எரிந்து நாசமாகின. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:மதுரை மீனாட்சி கோயிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை