தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) வெளியானது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்செந்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி துர்கா பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 448 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதில் தமிழ்ப்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் தமிழ்ப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவியின் தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், குடும்பத்தினர் பாராட்டினர். பின்னர் மாணவிக்கு பள்ளி முதன்மை முதல்வர் செல்வ வைஷ்ணவி பரிசு கோப்பை வழங்கினார்.