தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வந்த தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு - telangana governor tamilisai soundhararajan updates

தூத்துக்குடி: பதவியேற்புக்கு பின் தூத்துக்குடி வந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

telangana governor tamilisai soundhararajan updates

By

Published : Sep 28, 2019, 1:44 PM IST

தெலங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட தமிழிசை பதவியேற்புக்கு பின்னர் முதல்முறையாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். இதையடுத்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் பூரணக் கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பாஜகவினரும் கட்சித் தொண்டர்களும் தமிழிசையை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தமிழ்நாடு வந்த தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு, தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெறும் பாரதி விழாவில் கலந்துகொண்டு இலக்கியத்தில் பெண்களின் பங்கு குறித்து சிறப்புரை ஆற்றவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின்றன.

ABOUT THE AUTHOR

...view details