தமிழ்நாடு

tamil nadu

மசோதாவில் கையெழுத்து: நேரம் எடுத்து கொள்ளலாம் - ஆளுநர் தமிழிசை

By

Published : Dec 4, 2022, 1:59 PM IST

மசோதா வந்த உடனே ஆளுநர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று கிடையாது எனவும் சில சந்தேகம் இருந்தால் அதற்கு நேரம் எடுத்து கொள்ளலாம் என்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை பேட்டி
ஆளுநர் தமிழிசை பேட்டி

தூத்துக்குடி: தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் தூத்துக்குடி இன்று (டிச. 4) வந்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி-20 மாநாடு இந்தியா தலைமை தாங்குகிறது. இதில் அனைத்து முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள் என்றார்.

தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மசோதா வந்த உடனே ஆளுநர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று கிடையாது. சில சந்தேகம் இருந்தால் அதற்கு நேரம் எடுத்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

ஆளுநர் தமிழிசை பேட்டி

ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. ஆளுநர் என்பவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுவர் என்றும் இது ஜனநாயக நாடு, நாம் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: Digital Currency: டிஜிட்டல் கரன்சியின் சாதக, பாதகம்? சைபர் பாதுகாப்பு ஆய்வாளருடன் சிறப்பு நேர்காணல்

ABOUT THE AUTHOR

...view details