தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக்கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன - தெலங்கானா ஆளுநர் தமிழிசை - திட்டங்கள்

நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினார்.

தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்
தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்

By

Published : Mar 29, 2023, 3:17 PM IST

Updated : Mar 29, 2023, 3:43 PM IST

தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தபோது...

தூத்துக்குடி: நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். போலீசார் மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''தென் பகுதிக்கு வருவது மிக விருப்பமான ஒரு விஷயம், அதுவும் தூத்துக்குடிக்கு வருவது ரொம்ப விருப்பமான ஒரு விஷயம். தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று நிதின் கட்கரி-யிடம் பல நேரங்களில் கோரிக்கை வைத்திருக்கின்றோம்.

அதன் பேரில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாலையில் 200 கோடி ரூபாய் மதிப்பில் 6 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்டப் பொருளாதாரத்தில் மிக பிரமாண்டமான ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இது மட்டுமின்றி இத்திட்டங்களைப் போல, நாட்டின் வளர்ச்சிக்காக மேலும் பல திட்டங்கள் வர இருக்கின்றது'' என்றும் கூறினார்.

’’அடிப்படை கட்டமைப்புடன் வருங்கால சந்ததியினர் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க ஒவ்வொரு இடங்களிலும் கதிசக்தி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார், பாரத பிரதமர். அதில், ஐந்து மற்றும் ஆறு துறையைச் சார்ந்தவர்கள் சாலை மேம்பாட்டு துறைமுகத்துறையினைச் சேர்ந்து நாட்டுக்கு இப்படியான பிரமாண்டமான திட்டங்களைக் கொண்டு வருவதனால் புதுச்சேரியும் பல முன்னேற்றத்தைப் பெறுகிறது.

மேலும் இப்போது காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து திட்டம், புதுச்சேரியிலிருந்து கோயம்புத்தூர் மற்றும் சென்னைக்கு 20 பேர் கொண்ட சிறு ரக விமானப்போக்குவரத்து போன்ற திட்டங்களை முன்வைத்து பெருமிதம் கொண்டார்.

எல்லாவிதத்திலும் வளர்ச்சி திட்டங்களை பாரத பிரதமர் படிப்படியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில், தூத்துக்குடி துறைமுகமுகத்திற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் செப்டம்பர் மாதம் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகைத் திட்டம் தொடங்கப்படும் நிலையில், புதுச்சேரியில் 1000 ரூபாய் குடும்ப பெண்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து செயல்பாட்டில் உள்ளது. மேலும் குடும்பப் பெண்களுக்கு உதவும் பட்சத்தில் மத்திய அரசின் 200 ரூபாய் மானியம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் தங்களது குடும்பத்தின் பாதுகாப்பிற்காகவும், சமைப்பதற்கும் இந்த கேஸ் மானியம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த பெண் குழந்தைகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் காப்பீடு செய்வதற்கான திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் என்ன திட்டம் அறிவித்தாலும், துணைநிலை ஆளுநர் என்ற வகையில் அவருக்கு உறுதுணையாக இருந்து நான் செயலாற்றிக்கொண்டிருக்கிறேன். புதிய கல்விக்கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது, ஆனால் இப்படியான திட்டங்களை தமிழகம் போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் திட்டங்களை எதிர்க்கும் முன்பு முழுமையாக அதனை ஆராய்ந்து அதன் பயன்களை தெரிந்துகொண்டு அந்தந்த மாநிலங்கள் மத்திய அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து'' என்று கூறினார்.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்; சிறப்பான பட்ஜெட் எனத்தெரிவித்த உறுப்பினர்கள்

Last Updated : Mar 29, 2023, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details