தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, ”டாஸ்மாக் வணிகத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு வருவாய் ஈட்டி வருகின்றது.
டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி மதுபானக் கடைகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 16 ஆண்டு காலமாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் என எந்தவிதமான சலுகைகளையும் அரசு செய்து தரவில்லை.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும், அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே உள்ளன. இதுதவிர தமிழ்நாடு அரசால் இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணியில் உள்ள பணியாளர்களை அரசுத் துறையில் காலியாக உள்ள ஏதேனும் ஒரு துறையில், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு பணி வழங்க வேண்டும்.
தொடர்ந்து, தூத்துக்குடியில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் எந்தவிதமான குற்றச்சாட்டும் கண்டுபிடிக்காத நிலையில், 11 பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணி இடைநீக்கம் ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் பழி வாங்கப்பட்டுள்ளனர். எனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அவர்களின் பணி நீக்க உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நெல்லை, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம் உள்பட 9 மையங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரளாகப் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க:இலவச மாடுகள் வழங்குவதில் முறைகேடு - பொதுமக்கள் குற்றச்சாட்டு