தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர், பொன்ராஜா. இவரிடம் நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை மாற்ற கோவில்பட்டியைச் சேர்ந்த பாரதிசங்கர் என்பவர் கொடுத்த விண்ணப்பத்தினை பதிவு ஏற்றம் செய்வதற்கு ரூ.5ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய மின் ஊழியர் - bribe for change electric wire
மின் வயர், மின் கம்பம் மாற்றக்கோரி பயனர் அளித்த விண்னப்பத்தை பதிவேற்றம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய ஊழியர்
இதுகுறித்து, பாரதிசங்கர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் ஆலோசனைப்படி பாரதிசங்கர் ரசாயனம் தடவிய 5ஆயிரம் ரூபாயை இளநிலை பொறியாளர் பொன்ராஜாவிடம் வழங்கியுள்ளார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் பொன்ராஜாவை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Jan 25, 2023, 4:41 PM IST