தூத்துக்குடி, பாத்திமா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு! - Tamils who are trapped abroad
தூத்துக்குடி: வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று, சிக்கித் தவிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மக்கள்
இதைத்தொடர்ந்து பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பாத்திமா நகர் பகுதியிலிருந்து 3 மாத பணிக்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர்கள் பணி முடிந்தும்; கரோனா ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். மேலும், தற்போது அவர்கள் வருமானமின்றி வெளிநாட்டில் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:முட்டிபோட்டு நூதன போராட்டம்