தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

95 வயது மூதாட்டியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட முதியோர் பென்ஷனை திருப்பி எடுத்த அரசு… காரணம் என்ன? - தூத்துக்குடி செய்திகள்

3 வருடமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்கில் இருந்து திருப்பி எடுத்ததால் அந்த பணத்தை வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

3 வருடங்களாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட முதியோர் பென்ஷன் தொகையை திருப்பி எடுத்த தமிழ்நாடு அரசு
3 வருடங்களாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட முதியோர் பென்ஷன் தொகையை திருப்பி எடுத்த தமிழ்நாடு அரசு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:27 PM IST

3 வருடங்களாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட முதியோர் பென்ஷன் தொகையை திருப்பி எடுத்த தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி:சாத்தான்குளம் காமராஜர் நகரை சேர்ந்த வயதான மூதாட்டியான தங்கம் (வயது 95) அப்பகுதியில் தனது மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். இதில் மூத்த மகன் ரவி என்பவர் டெய்லராக இருந்த நிலையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

இரண்டாவது மகன் பாஸ்கர் என்பவர் இரண்டு கால்களும் நடக்க முடியாத ஊனமுற்ற மாற்றுத்திறனாளியாக உள்ளார். மூன்றாவது மகன் ராமன் என்பவர் மனச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதில் இரண்டாவது மகன் பாஸ்கர் மற்றும் மூன்றாவது மகன் ராமன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தங்கம் தனக்கும் முதியோர் உதவித்தொகை வேண்டுமென சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியருக்கு மனு அனுப்பியிருந்தார். இந்நிலையில், அவர் மனு கொடுத்த மறு மாதத்தில் இருந்து கடந்த மே மாதம் வரை ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இதனை சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் இந்த மூதாட்டியிடம் நேரில் வந்து தகவல் கூறவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த மூதாட்டியும் வங்கிக்கு சென்று பார்க்கும் அளவிற்கு விவரம் அறியாதவர் என்பதால் அவரும் அந்த வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் ஏறியதை பார்க்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வங்கிக் கணக்கில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சென்று பார்த்த போது அதில் கடந்த 3 வருடங்களாக அவருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வந்ததும், அவை அனைத்தும் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் இருந்து பணத்தை எடுக்காத நிலையில் மொத்தமாக கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு இவரது வங்கிக் கணக்கில் இருந்து திருப்பி பெறப்பட்டதாகவும் அதில் பதிவாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி எனக்கு உதவித்தொகை வருகிறது என வங்கி அதிகாரிகள் தெரிவிக்காத நிலையில், அந்த பணத்தை தான் எடுக்கவில்லை எனவும், இதை அனைத்தையும் தமிழ்நாடு அரசே திரும்ப பெற்றிருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது என மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே அந்த மூதாட்டி இருக்கும் வீடும் மழையின் காரணமாக வீட்டில் ஒரு பகுதி சரிந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு மூதாட்டி வங்கிக் கணக்கில் இருந்து எடுத்த 36 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் எனவும், தான் வசிக்கும் வீட்டை தமிழ்நாடு அரசு புதுப்பித்துக் கட்டித் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதியை ஒருமையில் திட்டியதாக முன்னாள் பாஜக பிரமுகர் கைது!

ABOUT THE AUTHOR

...view details