தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் புல்லட் ரெயில் திட்டம் - தமிழிசை தகவல் - வருமானவரி சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் புல்லட் ரெயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வருமானவரி சோதனையில் துரைமுருகன் வீட்டில் கட்டுக் கடங்காத பணம்- தமிழிசை

By

Published : Apr 1, 2019, 4:57 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் பாஜக கூட்டணி அரசுதான் மீண்டும் ஆட்சியில் அமர போகிறது. தற்போது வருகிற கருத்து கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு ஆதரவாகதான் உள்ளது.

அதேபோல் மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும். நாளைய தினம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என்றார்.

காங்கிரஸ் கட்சியை போன்று திமுகவும் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவும். ஏனெனில் தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையினர் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நடத்திய சோதனையில் கட்டுக்கடங்காத பணம் பிடிபட்டுள்ளது என்றார்.

மேலும், பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தூத்துக்குடியில் தொழில் நகரமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், டிரேட் சென்டர் அமைக்கப்படும் எனவும், புல்லட் ரெயில் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது என்றார்.

வருமானவரி சோதனையில் துரைமுருகன் வீட்டில் கட்டுக் கடங்காத பணம்- தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details