தூத்துக்குடி: அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு மழை பெய்தால் கூட மக்கள் அச்சப்பட தேவையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த டிச.17, 18 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களையும் புரட்டிப்போட்டது. இதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்தது.
இதனால் அம்மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் இந்த தூத்துக்குடி பகுதியில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட இந்த மழை வெள்ளத்தால் கிறிஸ்துமஸ் களையிழந்து காணப்படுகிறது.
இதையும் படிங்க: தென்காசியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம்!
வரலாறு காணாத பெரும் பாதிப்பை சந்தித்த தூத்துக்குடி மக்கள் சிறிய மழையை கண்டாலே அஞ்சும் நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று சென்னையில் இருந்து டெல்டா மாவட்டங்கள் முதல் தூத்துக்குடி வரையிலான கடலோரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யுக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த மழை 10-20 மி.மீ வரை பெய்யலாம் எனவும் ஆனால் இது பரவலாக இல்லாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மழையை கண்டு தூத்துக்குடி மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் இன்னும் 3-4 நாட்கள் வரை இந்த மழை தொடர்ந்தால் கூட பெரும் பாதிப்பு ஏதும் ஏற்படாது என கூறப்படுள்ளது. இதனால் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட தேவாலயங்களுக்கு செல்லும் மக்கள் குடைகளை உடன் எடுத்துச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை