தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிநகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெயிண்டர் கோடீஸ்வரனை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்நிலையில், கோடீஸ்வரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவியை அவர்களிடம் வழங்கினார். மேலும், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை, பசுமை வீடு கட்டித்தர பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி வஉசி நகர் நியாய விலை கடையில் விலையில்லா முகக்கவசத்தை கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 957 நியாய விலை கடைகள் மூலம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 120 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், 16 லட்சத்து 71 ஆயிரத்து 909 குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வீதம் 33 லட்சத்து 43 ஆயிரத்து 818 தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.