தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மலக்குழியில் இறங்கி உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'' - தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இந்தியாவில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் மலக்குழியில் இறங்கி உயிரிழப்பதில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 22, 2023, 6:31 PM IST

'மலக்குழியில் இறங்கி உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்''

தூத்துக்குடி: உடன்குடி பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சுடலைமாடன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு, உடன்குடி பேரூராட்சி தலைவியின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவியுமான திமுகவைச் சேர்ந்த ஆயிஷா கல்லாசி என்பவர் திட்டியுள்ளார்.

இதனையடுத்து மனம் உடைந்த தூய்மைப் பணியாளர் சுடலைமாடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்தச் சம்பவம் உடன்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் வருகை தந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தூய்மைப் பணியாளர் சுடலைமாடனை நேரில் சந்தித்து சம்பவம் மற்றும் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் ஆயிஷா மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கூறுகையில், ''தூய்மைப் பணியாளர் சுடலைமாடன் தற்கொலை முயற்சி தொடர்பாக முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், உதவி ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை குழு அமைக்கப்பட்டு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா மீது மட்டுமில்லாமல் ஆயிஷாவை பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிட அனுமதித்த தற்போதைய உடன்குடி பேரூராட்சி தலைவி ஹிமைரா பதவியை ரத்து செய்து அவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்தியாவில் தமிழ்நாடு தான் தூய்மை பணியாளர்கள் மலக்குழியில் இறங்கி உயிரிழப்பதில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. எனவே, இதைத் தடுக்க சட்ட மாற்றம் செய்ய வேண்டும். தற்போது தூய்மைப் பணியாளர் மலக்குழிகளில் இறங்கி உயிரிழந்தால் ஜாமீனில் வரக்கூடிய பிரிவாக உள்ளதை, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாக மாற்ற வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு காரணமாக சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தூய்மைப் பணியாளர் நல வாரியம் செயல்படாமல் உள்ளது. இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், இந்தியாவில் 11 மாநிலங்களில் தூய்மைப் பணியாளர் ஆணையம் உள்ளது. அதே போன்று தமிழகத்திலும் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய தம்பதி.. பகீர் வீடியோ..

ABOUT THE AUTHOR

...view details