தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தமிழ்நாட்டில் விவசாயத்திற்குப்போதுமான உரங்கள் கையிருப்பில் உள்ளன' - Initiation of agricultural work

தமிழ்நாட்டிற்கு போதுமான உரங்கள் கையிருப்பில் உள்ளன என தமிழ்நாடு வேளாண்மைத்துறை உரங்கள் விநியோகத்திற்கான இணை இயக்குநர் கே.மணி பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விவசயத்திற்கு போதுமான உரங்கள் கையிருப்பு - கே.மணி பேட்டி!
தமிழ்நாட்டில் விவசயத்திற்கு போதுமான உரங்கள் கையிருப்பு - கே.மணி பேட்டி!

By

Published : Nov 10, 2022, 7:26 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை துவக்கி உள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதத்திற்கு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 720 டன் உரங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுவரை 25,200 டன் உரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த உரங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள உர நிறுவனங்கள் மூலமாக உற்பத்தி செய்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் உர நிறுவனத்தின் மூலமாக 45 ஆயிரம் டன் உரங்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் நடைபெற்று வரும் உற்பத்திப் பணியை இன்று (நவ.10) இயக்குநர் கே.மணி ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழ்நாடு வேளாண்மைத் துறை உரங்கள் விநியோகத்திற்கான இணை இயக்குநர் கே.மணி கூறுகையில், 'தமிழ்நாட்டில் விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கத்தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது, தமிழ்நாட்டில் 82,000 டன் தான் உரங்கள் தான் கையிருப்பில் உள்ளது. அரசு மண்ணின் வளத்தை பாதுகாப்பதற்காக இயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்கியுள்ளது.

’தமிழ்நாட்டில் விவசாயத்திற்குப்போதுமான உரங்கள் கையிருப்பில் உள்ளன'

எனவே, பெருநிறுவனங்களில் வேப்பம் புண்ணாக்கு மற்றும் குப்பைக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை வாங்கி விவசாயிகளுக்கு வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது’ எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:'இந்து' என்ற சொல் குறித்த சர்ச்சை கருத்தை திரும்பப்பெற்றார் சதீஷ் ஜார்கிஹோலி!

ABOUT THE AUTHOR

...view details