தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து குமார் ஜெயந்த் ஆய்வு - covid 19

தூத்துக்குடியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து குமார்ஜெயந்த் ஆய்வு செய்தார்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு மேற்பார்வையாளர்  குமார் ஜெயந்த் தகவல்
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு மேற்பார்வையாளர் குமார் ஜெயந்த் தகவல்

By

Published : Apr 11, 2021, 1:49 AM IST

தூத்துக்குடி: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக மூத்த ஐஏஎஸ் அலுவலர்களை மேற்பார்வையாளராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்பார்வையாளராக மூத்த ஐஏஎஸ் அலுவலர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சனிக்கிழமை (ஏப்.10) தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை பகுதி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கரோனா சிகிச்சை வார்டு பகுதி உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’தமிழ்நாட்டில் அரசு எடுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் கரோனா பரவல் பாதிப்பு வெகுவாக குறைக்கப்பட்டது. மேலும், பொதுமக்களும் சரியான முறையில் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டதன் மூலமாக கரோனா பாதிப்பு மற்ற இடங்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டு விதிகளின்படி மக்கள் நடந்து கொள்ள வேண்டும். பேருந்து, ஆட்டோ, பொது இடங்கள் இவற்றில் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா பாதிப்பை நாம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். மேலும், கரோனா தடுப்பூசியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதையும் படிங்க:மதவாதிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட மருத்துவ மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details