தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்! - பெண்கள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் கைது

தூத்துக்குடி: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பெண்கள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

caa act against protest
caa act against protest

By

Published : Dec 18, 2019, 1:52 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் அசாருதீன், மாவட்ட பொருளாளர் நாசர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

போராட்டம் செய்யும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் குறித்து மாநில பேச்சாளர் ரஹ்மத்துல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரானது. இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்த தமிழர்களுக்கும், இஸ்லாமியருக்கும் குடியுரிமை வழங்கப்படாது என தெரிவித்திருப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசும் துணை புரிந்துள்ளது. எனவே மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் இஸ்லாமிய மக்களின் போராட்டம் புது வடிவங்களை எடுக்கும்" என்றார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: 'இந்தியா சர்வாதிகார நாடு அல்ல' - திருநாவுக்கரசர் எம்.பி.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details