தூத்துக்குடி: நெல்லையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்திராகாந்தி, காமராசர் வெண்கலசிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி வந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "மோடி அரசின் மிக மோசமான செயல்பாடுகளில் ஒன்று சமையல் எரிவாயு விலை உயர்வு. தவறான பொருளாதார கொள்கையினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
லாக்அப் டெத் தில் இரண்டு வகைகள் உண்டு. இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் லாக்கப்டெத்தை நியாயப்படுத்த முயற்சித்தனர். இப்போதைய அரசாங்கம் லாக்கப் டெத் நடந்தால் அதை கண்டிக்கின்றனர். சம்பந்தப்பட்ட காவல்துறைக்குத் தண்டனை தருகின்றனர். காவல்துறையினர் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடத்தப்படுகிறது. லாக்கப் டெத் விவகாரத்தில் இப்போதைய அரசின் போக்கு சரியானது.