தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 7, 2022, 10:46 PM IST

ETV Bharat / state

வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட சாலைகள்: முதலமைச்சர் ஆய்வு

வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 7) ஆய்வு செய்தார்.

தூத்துகுடியின் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு
தூத்துகுடியின் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 7) பிரையண்ட் நகரில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் வகையில், தூத்துக்குடி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 9 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரையண்ட் நகர் மேற்கு பிரதான சாலையின் மேற்குப் பகுதி வடிகால் மற்றும் பிரையண்ட் நகர் மேற்குப் பகுதி தெருக்கள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இணைப்பு வடிகால் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடிகால் அமைக்கும் பணி

வடிகால் அமைக்கும் பணியில் மொத்தம் 6.237 கிலோ மீட்டரில் 3.560 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. தொடர்ந்து, 10 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரையண்ட் நகர் மேற்கு பிரதான சாலையின் கிழக்குப் பகுதி பிரதான வடிகால் மற்றும் சிதம்பர நகர், பிரையண்ட் நகர் மத்தியப் பகுதி தெருக்கள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வடிகால் அமைக்கும் பணியில் மொத்தம் 8.208 கிலோ மீட்டரில் 5.950 கிலோ மீட்டர் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

தூத்துகுடியின் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு

மேலும், 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுப்பையாபுரம் முதல் மாநில நெடுஞ்சாலை -176 வரையிலானப் பிரதான வடிகால் மற்றும் சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம் தெருக்கள் முழுவதும் நடைபெற்று வரும் பிரதான வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வடிகால் அமைக்கும் பணியில் மொத்தம் 8.460 கிலோ மீட்டரில் 2.600 கிலோ மீட்டர் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து, 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேக் கார்டன், குமரன் நகர், சத்தியா நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுந்தரவேல்புரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இப்பணியில் மொத்தம் 8.332 கிலோ மீட்டரில், 4.400 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தூத்துகுடியின் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு

மீதமுள்ள பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதோடு, சாலைப் பணிகள் நடைபெறும்போது தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு சாலையின் தரத்தினை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, அப்பகுதி மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.

இதையும் படிங்க:மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க மறுத்த ஜெயலலிதா - பரபரப்பு வாக்குமூலம் அளித்த மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details