தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2020, 10:46 PM IST

ETV Bharat / state

'தமிழ் நமது தாய்மொழி, இந்தி படிக்க வேண்டிய மொழி' - நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடி: தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் நமது தாய்மொழி, ஆங்கிலம் நமக்கு நட்பு மொழி, சமஸ்கிருதம் வேத மொழி, இந்தி நாம் படிக்கவேண்டிய மொழி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

nainar nagendran
nainar nagendran

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் அலை வீசுகிறது. மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பலர் இன்று (செப்டம்பர் 17) பாஜகவில் இணைந்து வருகின்றனர். இதனைப் பார்க்கையில் வருகின்ற தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜகவை பொறுத்தவரையில் தமிழுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறோம்.

மோடி பிறந்தநாளில் நயினார் நாகேந்திரன்

இந்தியை வைத்து திமுகவினர் அரசியல் நடத்த நினைக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் நமது தாய்மொழி, ஆங்கிலம் நமக்கு நட்பு மொழி, சமஸ்கிருதம் வேத மொழி, இந்தி நாம் படிக்கவேண்டிய மொழி அவ்வளவுதான். மற்றபடி இந்தி திணிப்பு எதையும் செய்யவில்லை. தலைமை முடிவு செய்தால் கன்னியாகுமரி தொகுதியில் நான் போட்டியிடுவேன்" என்றார்.

இதையும் படிங்க:17 ஆயிரத்து 17 உயிரினங்களை ஆய்வு செய்து ஆராய்ச்சி மாணவி அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details