தூத்துக்குடி: சாத்தான்குளம் புதுகுளம் பகுதியைச்சேர்ந்த ராம் என்பவரது மகன் கருப்பசாமி (47). இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சிறியதாக குடிசை கட்டி, பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி அருகில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் இவர் இன்று (ஜூன் 19) அதிகாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள அவரது கடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.