தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் படுகாெலை; கணவர் தலைமறைவு - தாளமுத்துநகரில் இளம்பெண் படுகாெலை

தூத்துக்குடி: தாளமுத்துநகரில் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மனைவியை கொலை செய்துவிட்டு, தனது குழந்தைகளுடன் கணவன் தலைமறைவான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Suspicion of Behavior young girl murdered by her husband in tuticorin
Suspicion of Behavior young girl murdered by her husband in tuticorin

By

Published : Jul 28, 2020, 4:34 PM IST

Updated : Jul 30, 2020, 2:48 PM IST

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அருகே உள்ள ஜாகிர்உசேன் நகரை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மனைவி முருகவள்ளி (24). இவர் தனது வீட்டில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்துநகர் காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துக்வகல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழு, வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெண்ணின் கணவர் சண்முகராஜைத் தேடி வருகின்றது.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக சண்முகராஜன், முருகவள்ளியைக் காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தமிழ்செல்வன் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் உள்ளனர். முருகவள்ளி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சண்முகராஜ் கண்டித்ததால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சண்முகராஜ் நைலான் கயிறை வைத்து மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தப்பிச் சென்றது இந்த வழக்கின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:நிலத் தகராறு: தொழிலதிபர் கொலை!

Last Updated : Jul 30, 2020, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details