தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை திறக்க வேண்டும் என ஆலையின் ஆதரவாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை ஆதரவாளர்கள் இன்று (செப்.4) தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் பேசுகையில், “ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்ட காலத்திலிருந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஆலை மூடப்பட்டிருந்த நிலையிலும் சமூக வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானில் அதிகரித்த தாமிர உற்பத்தி
இதன்மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள், சுயதொழில் பயிற்சி போன்ற பல நன்மைகள் பெண்களுக்கு கிடைத்து வந்தன. தற்போது அந்த செயல்பாடுகளும் தடைப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு தரும் மரியாதை கூட ஆதரவாளர்களுக்கு கிடைப்பதில்லை. எதிர்ப்பாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்பது போல், ஆலைக்கு ஆதரவாளர்களான எங்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களை கேட்க வேண்டும்.