தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி: நிவாரணத்தொகை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்! - tuticorin crime news

தூத்துக்குடி: பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான நிவாரணத் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.

பாலியல்
பாலியல்

By

Published : Nov 23, 2020, 7:46 PM IST

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 2019ஆம் ஆண்டு, 16 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைதுசெய்தார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் கிடைக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலமாக, தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த நிவாரணத்தொகையான ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை, இன்று (நவ.23) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details