தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

200 அடி தூரம் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல் - திருச்செந்தூர் கடல்

திருச்செந்தூர் கடல் கோயிலில் இருந்து, அய்யா கோயில் கடற்கரை வரை சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியுள்ளது.

கடல் 200 அடி தூரம் உள்வாங்கியது
கடல் 200 அடி தூரம் உள்வாங்கியது

By

Published : Apr 5, 2022, 8:47 AM IST

Updated : Apr 5, 2022, 11:00 AM IST

திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் அமாவாசை அன்று கடல் நீர் உள்வாங்கியது போன்று தற்போது கடல் நீர் உள்வாங்கியுள்ளது. கடந்த முறை 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்நீர் தற்போது 200 அடி தூரத்திற்கும் மேல் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலுக்குள் இருக்கும் பாறைகளை அதிக அளவில் காண முடிகின்றது.

கடல் 200 அடி தூரம் உள்வாங்கியது

நீராடுவதற்காக வந்த பக்தர்கள் அலைகள் இல்லாத கடலில் பாறைகளின் மீது ஏறி நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு உள்வாங்கிய கடல் நீர் தொடர்ந்து உள்வாங்கி இருப்பது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'புல்லட்டு வண்டி' பாடலுக்கு நோயாளி அறையில் குத்தாட்டம் போட்ட செவிலியர்கள் - கோமா நோயாளிக்கு புதிய வகை சிகிச்சை

Last Updated : Apr 5, 2022, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details