தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் பாலு. இவர், ஏரல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ஏரல் பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் மதுபோதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதனைக் கண்ட உதவி ஆய்வாளர் போதையிலிருந்த முருகவேலை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினார். இதில், ஆத்திரமடைந்த முருகவேல், உதவி ஆய்வாளர் மீது சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் முருகவேல் இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர், பாலுவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காவல் அலுவலர் ஒருவரை வாகனம் ஏற்றி கொலைசெய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பார்வையிட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 10 தனிப்படை அமைத்து தப்பியோடிய முருகவேலை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், அவர் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதையும் படிங்க: மணல் கொள்ளையை தடுக்க முயன்ற தலைமைக் காவலர் - டிராக்டரை ஏற்றிக் கொலை செய்த கொள்ளையர்கள்!