தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு உத்தரவைக் கடந்த 10ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. கரோனா மருத்துவ சிகிச்சைக்காக உலகத்தமிழர்கள் நிதி உதவி அளித்து உதவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த பள்ளி சிறுவன் முதல் நடிகர், நடிகைகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பண உதவி அளித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி ரிதானா (12), தன் தந்தை மருத்துவ செலவுக்காக சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த 1,970 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மாணவியின் தந்தை நாகராஜன் உயிரிழந்தார்.