தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிலக்கரி மாயமான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை'

அனல் மின் நிலையங்களில் நிலக்கரி மாயமான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

நிலக்கரி மாயமான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை
நிலக்கரி மாயமான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை

By

Published : Oct 16, 2021, 9:49 AM IST

தூத்துக்குடி: அனல் மின் நிலையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வுமேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "கடந்த ஆட்சியில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சுமார் 71 ஆயிரம் டன் நிலக்கரி குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல்செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்புக்கும், பதிவேட்டுக்கும் உள்ள வித்தியாசத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு நாளைக்கு 16 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. நான்கு நாள்கள் வரை தேவையான நிலக்கரி இருப்புவைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி தேவை நாள் ஒன்றுக்கு 56 ஆயிரம் டன் ஆகும். நேற்று 51 ஆயிரம் டன் நிலக்கரி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2006-2011ஆம் ஆண்டுகளில் நிறுவுத்திறனில் 83 விழுக்காடு மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2016-2021ஆம் ஆண்டுகளில் 57 விழுக்காடு மட்டுமே உற்பத்தி நடந்துள்ளது. தற்போது அதனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நிலக்கரி மாயமான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 386 விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் நான்காயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இரண்டாயிரம் மெகாவாட் எரிவாயு மூலம் புதிய மின் திட்டங்களைத் தொடங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்சாரத் துறையில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன.

இதில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப்பணியிடங்கள் நிதிநிலைக்கு ஏற்ப, அவசர தேவைகளைக் கருத்தில்கொண்டு வரக்கூடிய காலங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:பெண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்

ABOUT THE AUTHOR

...view details