தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவி ஸ்னோலின் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக்குழு துப்பாக்கிச்சூடு குறித்து பல தரப்பட்ட மக்கள் இடையே விசாரணையை நடத்திவருகின்றனர். ஒரு நபர் ஆணையத்தின் 16ஆவது கட்ட விசாரணை கடந்த 12ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்றது.
ஒரு நபர் ஆணையம் 16ஆவது கட்ட விசாரணை குறித்து வழக்கறிஞர் வடிவேல் முருகன் தெரிவிக்கையில், "16ஆம் கட்ட விசாரணைக்கு 29 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் முகிலன் உள்பட 25 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுவரை 409 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஒரு நபர் ஆணையத்தின் 16ஆவது கட்ட விசாரணை நிறைவு அதில், 588 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களிடம் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையத்தின் 17ஆவது கட்ட விசாரணை வருகிற டிசம்பர் மூன்றாம் தேதி தொடங்கி ஆறாம் தேதி வரை நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை : ஒ.பி.எஸ். உறுதி..!