தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிக்க வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று பகல் 12 மணி அளவில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பெருந்திரளாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்துநிறுத்தி சமாதானம் செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஹரி ராகவன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஹரி ராகவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இழுத்து மூடியது. இதையடுத்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சிகள் எடுத்துவருகின்றது. இதற்கு மாநகராட்சி அலுவலர்கள், மாவட்ட நிர்வாகமும் துணை போய்க்கொண்டிருக்கின்றார்கள். ஒருபுறம் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்குத் தொடுத்துவிட்டு, மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதாக தோன்றுகிறது. எனவே தூத்துக்குடியில் இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக பிரித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக ஆலையை மீண்டும் திறப்பதற்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். அதன் காணொலி கீழே...
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது