இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம், நீர், காற்று, கடல் என அனைத்தையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலை இன்று மக்களிடையே சாதி ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடிய பின்பும், மாநகராட்சி அலுவலகம், காவல் துறை உள்ளிட்ட இடங்களில் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை ஊழல்மய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இதை தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. எனவே, அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது வெறும் கண்துடைப்பிறேகே என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் ஊழலை ஊக்குவிக்கும் ஸ்டெர்லைட் ஆகவே இத்தகைய ஊழல்மய செயல்களில் ஈடுபட்டுவரும் ஸ்டெர்லைட் நிறுவன அலுவலர்களின் மீதும், அதற்கு துணையாக இருக்கும் பணியாளர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தோம்.
இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை எனில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் மிகப்பெரிய அளவில் மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெறும்” என்றனர்.