தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஸ்டெர்லைட் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது..!' - சிஇஓ பங்கஜ்குமார் - தூத்துக்குடி

தூத்துக்குடி: "ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்" என்று, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பங்கஜ் குமார் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் நிறுவன நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் சென்றுள்ளது -ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி!

By

Published : May 29, 2019, 11:41 PM IST

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராடியதால் இழுத்து மூடப்பட்டது. இதற்கிடையே வேதாந்தா நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் ஆறு முக்கிய மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கடந்த சில மாதத்திற்கு முன்னர் அறிவித்திருந்தனர்.

அதன் ஒருபகுதியாக குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கும் தாமிர வித்யாலயம் திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறுவன ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பங்கஜ்குமார் பேசுகையில், "எங்களுடன் சேர்ந்து இந்த சமூகமும் வளரும் என்பதை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நம்புகிறது. அதை நிரூபிக்கும் பொருட்டு இன்று ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளோம். இந்த நலத்திட்டங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் தற்போது சென்றுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details