தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்- இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டி! - ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்- இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டி!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்- இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டி!

By

Published : Jul 12, 2022, 2:40 PM IST

தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்குவதற்கு விரைவாக வழிவகை செய்ய வேண்டும், நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை செய்து உரிய நீதி கிடைத்திட செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.

இதையடுத்து அவர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த அர்ஜுன் சம்பத் கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழக அரசு அனுமதியுடன் தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தால் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி ஆலையானது உலகளாவிய நவீன தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வந்தது.

பொய்யான தகவல்கள்:இந்தியாவில் உள்ள காப்பர் தேவையை ஸ்டெர்லைட் நிறுவனம் நிறைவு செய்த நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். ஆலை சம்பந்தமாக புற்று நோய் வந்தது, மீன்கள் அழிந்து விட்டது எனப் பொய்யான தகவலை பரப்பி ஆலை மூடப்பட்டுள்ளது என்றார்.

ஆலையால் எந்த ஒரு தீங்கும் இல்லை: மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசுபாடு ஏற்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் போலியான போராளிகளை உருவாக்கி அவர்களுக்கு பல உதவிகள் செய்து தூத்துக்குடியில் கலவரத்தை ஏற்படுத்தி ஆலையை மூட காரணமாக அமைச்செய்தனர். இந்த ஆலையால் எந்த ஒரு தீங்கும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தன்னுடைய ஆய்வு அறிக்கை தெளிவு பெறக் கூறயிருக்கிறது என்றும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

போராட்டத்தை தூண்டி விட்டனர்: மேலும் பேசிய அவர் கலவரத்தை தூண்டியவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை, இதனால் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடாக எதையும் இதுவரை தமிழக அரசு செய்யவில்லை.

வேலையின்மை:தற்போது ஆலையில் வேலை செய்த நபர்கள் வேலையின்மையால் வேறு வெளியிடங்களுக்கு வேலைக்குச் சென்றதால் பள்ளி குழந்தைகள் படிப்பு மற்றும் குடும்ப சூழ்நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆலை நிர்வாகத்தினரின் ஆலை விற்பனை செய்வதைத் தடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் மீண்டும் ஆலையை இயக்குவதற்கு விரைவாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து விசாரணை செய்து உரிய நீதி கிடைத்திடவும், தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையயும் முன்வைத்தார்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்- இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டி!

இதையும் படிங்க:'ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு'

ABOUT THE AUTHOR

...view details