தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையில் 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி - Sterlite produces 500 MT oxygen

ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

By

Published : Jun 7, 2021, 7:39 PM IST

தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, தொடர்ந்து மருத்துவ தேவைக்காக திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி நடக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு இதனைக் கண்காணித்து வருகிறது.

ஆக்ஸிஜன் உற்பத்தி

ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் உற்பத்தி அலகில் இதுவரை 542.92 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 265 சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு நேரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜன் அனைத்தையும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், கரூர், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மருத்துவமனைகளுக்கு மருத்துவ பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் உரிமம் ரத்து- தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details