திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குள்பட்ட பட்டாண்டிவிளையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறை கேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:
திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பீர்களா?
- நிச்சயமாக, பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநில அரசுக்கான பங்கு குறைக்கப்படும். பெட்ரோல் விலை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.