ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இறுதி கட்ட பரப்புரையை நேற்று மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுகிற உரிமையில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
நான் பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ளதாக அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் தமிழிசை கூறியுள்ளார். அவர் அதனை நிரூபித்தால் நான் அரசியலிலிருந்து விலகுகிறேன். இல்லையெனில் அவர் அரசியலை விட்டு விலக வேண்டும்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் மோடிஆறுதல் கூட சொல்லவில்லை. 14 மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது அதற்கான நிவாரணமும் சரியாக வந்து சேரவில்லை.
ஆகவே மத்தியில் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் ஏப்ரல் 18ஆம் தேதி உதயசூரியனுக்கு வாக்களித்தது போல், மே 19ஆம் தேதியும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வல்லநாடு ஊராட்சி பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேல கால்வாய், கீழ கால்வாய் தூர்வரப்படும்" என வாக்குறுதி அளித்தார்.
'பாஜகவுடன் தொடர்பை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்'ஸ்டாலின்