தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் பணியாளர்கள் சிலர் பணி நேரத்தில் டிக்-டாக் வீடியோ எடுத்துள்ளனர். அதனை சமூக வளைதங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரவலாக பரவி வருகிறது. சில நாட்களாகவே பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதாழ், வீட்டு வரி, குடிநீர் வரி என்று எதற்கு அணுகினாலும் நகராட்சி பணியாளர்கள் முறையாக பதில் சொல்லாமல் பொதுமக்களை அலைகழிப்பதாக புகார் இருந்து வந்தது.
நகராட்சி ஊழியர்கள் பணி நேரத்தில் டிக்டாக்கில் ஆட்டம்! - Kayalpattinam
தூத்துக்குடி: அலுவலக நேரத்தில் காயல்பட்டிணம் நகராட்சி ஊழியர்கள் டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இது குறித்து அலுவலர்கள் விளக்கமளிக்ககோரி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பணிநேரத்தில் டிக்டாக் செயலி மூலம் உடன் பணியாற்றும் பணியாளர்களுடன் பாட்டு நடனம், நடிப்பு என வீடியோ எடுத்து எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் காயல்பட்டிணம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நகராட்சி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நகராட்சி ஊழியர்களின் இந்த செயலுக்கு விளக்கம் அளிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.