உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் புத்தாண்டு பண்டிகையை மிக உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் ஒன்றான தூத்துக்குடியில் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
புனித பனிமய மாதா பேராலயம், திரு இருதய மேற்றிராசன ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம், புனித வளனார் ஆலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி இரவு 11.30 மணியிலிருந்தே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவ மக்கள் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.
புனித பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலி அருள்தந்தை குமார்ராஜா தலைமையில் நடைபெற்றது. திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
அதேபோல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்றதாகும்.
இங்கு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், 2019ஆம் ஆண்டை நன்றியுடன் வழியனுப்பும்விதமாக பங்கு பாதிரியார் சூசை மாணிக்கம் தலைமையில் மறையூரையும், 2020ஆம் ஆண்டை வரவேற்று நள்ளிரவு 12 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட பாதிரியார்களின் சிறப்பு திருப்பலி வழிபாடும் நடைபெற்றது.
தருமபுரியிலும் ஆங்கில புது வருடத்தையொட்டி பேராலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அப்போது கிறிஸ்தவ பெருமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர். அதேபோல் 2020ஆம் ஆண்டிற்கான உறுதிமொழியையும் அவர்கள் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் கோலாகலமாக தொடங்கிய ஹெத்தையம்மன் திருவிழா!