தூத்துக்குடி:முத்தையாபுரம் பகுதியில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கியின் எதிரே ஐஓசிஎல் (IOCL) குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (அக்.18) இந்த குழாய் பதிக்கும் பணியில் புலம்பெயர் தொழிலாளர்களான உத்தரப்பிரதேசம் பாட்வாலியா ரோடி பகுதியைச் சேர்ந்த அசோக் சர்மா மகன் ஓம் பிரசாத் (26), பீகார் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஹரிராம் நாத் ஷா மகன் ஹரிராம் பிரசாத் (38), கட்டிவன் ஷா மகன் பிரசாத் (29) மற்றும் பீகாரைச் சேர்ந்த வக்கீல்கிரி மகன் ரிக்தேஷ் (25) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த குழி இடிந்து விழுந்துள்ளது. இதில் 4 பேரும் குழிக்குள் சிக்கி புதையுண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சுடலைமணி, சண்முகையா, கதிரவன், டேவிட் ராஜன் மற்றும் சக்தி மாரிமுத்து ஆகியோர் அடங்கிய மாவட்ட எஸ்.பி தனிப்படை போலீசார், உடனடியாக அந்த குழிக்குள் இறங்கி சரிந்த மண்ணை தோண்டி அகற்றி, அதில் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர்.