தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு வாட்ஸ்அப் மூலம் வங்கிக் கணக்கிலும், ஆன்லைன் வாயிலாக கிஃப்ட் கார்டு உள்ளிட்டவற்றிற்கும் பணம் செலுத்துமாறும் கோரிய செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் தனது சுயவிவரப் படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தநிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சில ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது சுயவிவரப் படத்தை சமூக வலைதளங்களில் வைத்துப் பணம் கேட்டு செய்தி அனுப்பி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆகவே, இதுபோன்று வரும் போலி செய்திகளை நம்ப வேண்டாம். இது குறித்து முறையாக சைபர் செல்லில் புகார் கொடுக்கப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.