தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகளை, ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்! - தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம்

தூத்துக்குடி: கரோனா ஊரடங்கில் அரசு சில தளர்வுகளை அறிவித்த நிலையில் சிவகளை, ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சிவகளை, ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் தொடக்கம்
சிவகளை, ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் தொடக்கம்

By

Published : May 25, 2020, 8:07 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுக்காவில் உள்ள சிவகளை கிராமத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, மத்திய தொல்லியல் துறை சார்பில் சிவகளை பகுதியில் தொல்லியல் கள ஆய்வு செய்யவேண்டுமென மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சுந்தர் அமர்வு சிவகளையில் அகழாய்வுப் பணி மேற்கொள்ள உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல்துறை சிவகளையில் அகழாய்வுப் பணி செய்ய அரசு அறிவித்தது. மேலும் சிவகளை, கொடுமணல், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுக்காக 2 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இதில் சிவகளையில் அகழாய்வுப் பணிக்கு முதல்கட்டமாக ரூ. 35 லட்சம் ஒதுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர், ஆணையாளர் உதயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சிவகளையில் ஆய்வுப்பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில், தொல்லியல் அலுவலர்கள் பிரபாகரன், தங்கதுரை, காசிலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று தொல்லியல் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. கீழடி நாகரிகத்தை விட பழமையான நாகரிகத்தை தாமிரபரணி கொண்டுள்ளது என்பதால் இங்கு கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் மற்றும் இரும்புக் கால குடியேற்றங்கள் காணப்படலாம் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: தேனியில் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details