தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
10 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிப்பு -சீதாராம் யெச்சூரி - 10 crore youngsters
தூத்துக்குடி: 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் படித்த 10 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருவதாக தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
அப்போது, "நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் வரும். ஆனால் தேர்தலுக்கு முன் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா, நாட்டில் மதச்சார்பற்ற நிலை பாதுகாக்கப்பட்டதா, அரசியல் சட்டம் நமக்கு தந்திருக்கும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டதா இனி அது தொடருமா என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர், "கோவில்பட்டி தீப்பெட்டி, கடலைமிட்டாய்க்கு பெயர் பெற்றது. மோடி அரசின் ஜி.எஸ்.டி.க்கு பின் கடலைமிட்டாய், தீப்பெட்டிக்கு கூடுதல் மடங்கு வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு கூட்டாளியாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். இந்தக் கொள்ளை கூட்டணியினர் மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். எனவே மத்தியில் நல்ல ஆட்சி அமைவதற்கு பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்" என தெரிவித்தார்.